Skip to main content

'நோ கரோனா' என்று சொல்லுங்கள்... கரோனா ஓடிவிடும் - மத்திய அமைச்சர் கண்டுபிடிப்பு!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020
ramdas athawale

 

 

பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தவரும் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமார் ராம்தாஸ் அத்வாலே, இந்தியாவில் கரோனா தொற்று பரவ ஆரம்பித்த நேரத்தில், கரோனவை விரட்ட, மக்களை  கோ கரோனா, கரோனா கோ என கோஷமிடுமாறு கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் கேளிக்குள்ளானது.

 

இந்தநிலையில், இவர் புதியவகை கரோனவை தடுப்பதற்கு, ' நோ கரோனா  கரோனா நோ' என கோஷமிடுமாறு தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "முன்னதாக நான் ‘கோ கரோனா, கொரோனா கோ’ என்ற கோஷத்தைக் கொடுத்தேன். இப்போது கரோனா போய்க்கொண்டிருக்கிறது. தற்போது இந்த புதிய வகை புதிய கரோனா வைரஸிற்கு , ‘நோ கரோனா, கரோனா நோ ’ என்ற கோஷத்தை தருகிறேன் என கூறியுள்ளார்.

 

மேலும், "பிப்ரவரி மாதம் கோவிட் -19 நிலைமை இந்தியாவில் மோசமாக இல்லாதபோது நான் அந்த கோஷத்தை கொடுத்தேன்.  அந்த நேரத்தில், இதனால் கரோனா போய்விடுமா என மக்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். தற்போது  இந்த கோஷத்தை உலகம் முழுவதும் காண்கிறோம்" எனவும் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்