Skip to main content

வாழ்வை மாற்றிய சகோதரனின் மரணம்... வழக்கறிஞராக மாறிய ரோஹித் வெமுலாவின் தம்பி!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020
raja vemula

 

கடந்த 2016ஆம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைகழகத்தில் பி.எச்.டி பயின்றுவந்த ரோஹித் வெமுலா, சாதி அடக்குமுறையினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ரோஹித் வெமுலாவின் சகோதரர் ராஜா வெமுலா. இவர் விஞ்ஞானி ஆகவேண்டும் என விரும்பியவர். ஆனால், அண்ணனின் மரணத்திற்குப் பிறகு, ராஜா வெமுலா அவரது தாயார் ராதிகா வெமுலாவுடன் இணைந்து, சாதியப் பகுப்பாட்டை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். பல்கலைக்கழகங்களில் தலித் பாகுபாட்டை எதிர்த்து, ரோஹித் தொடங்கிய போராட்டத்தை, தாய்-மகன் இருவரும் தொடர்ந்தனர்.

 

ரோஹித் வெமுலாவின் மரணத்திற்குப் பிறகு, வருமானத்திற்காக ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக மாறினார் ராஜா வெமுலா. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பணி வழங்க முன்வந்தபோது அதனை மறுத்த ராஜா வெமுலா, சட்டம் படிப்பதற்காக தனது விஞ்ஞானி ஆசையைக் கைவிட்டார்.

 

தற்போது ராஜா வெமுலா சட்டபடிப்பை முடித்துள்ளார். இதுகுறித்து ரோஹித் மற்றும் ராஜா வெமுலாவின் தயார் ராதிகா வெமுலா, தனது ட்விட்டர் பக்கத்தில், இனி தன் மகன் மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் நீதிமன்றத்தில் போராடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், என் இளைய மகன் ராஜா வெமுலா இப்போது ஒரு வழக்கறிஞர். 5 வருடங்களுக்குப் பிறகு, ரோஹித் வெமுலா மறைவுக்குப் பிறகு, எங்கள் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும். வழக்கறிஞர் ராஜா வெமுலா இப்போது மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் நீதிமன்றத்தில் பணியாற்றுவார், போராடுவார், இது நான் சமுதாயத்திற்குத் திருப்பிச் செலுத்துவதாகும். அவரை ஆசீர்வதியுங்கள். ஜெய் பீம்” எனக் கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்’ - தமிழக அரசு

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

Can apply for Dr. Ambedkar Award says Tamil Nadu Govt

 

டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

 

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம் சென்னை - 05 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

அவதூறு வழக்கு; மன்னிப்பு கோரினார் ஆர்.பி.வி.எஸ். மணியன்

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

RBVS Manian has apologized for speaking inappropriately about Ambedkar.

 

சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் உள்ளிட்டோர் குறித்து இந்துத்துவா சிந்தனையாளரும், ஆன்மீக பேச்சாளரும், வி.எச்.பி. முன்னாள் மாநிலத் துணைத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியன் அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்கலில் வைரலானது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

 

இதையடுத்து சென்னை தியாகராயர் நகர் காவல்நிலையத்தில் வி.சி.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா. செல்வம் எனபவர் புகார் அளித்தார். அதன் காரனமாக சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஆர்.பி.வி.எஸ். மணியனை அவரது சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் வைத்து அவரை அதிகாலையில் கைது செய்தனர். 

 

போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ். மணியன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஆர்.பி.வி.எஸ். மணியன், “நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. எனக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம், சிறுநீர் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. மேலும், என் முதுமையை கருத்தில் கொண்டு என்னை விடுவிக்க வேண்டும்” என கோரினார். மேலும், காவல் உறுதி செய்யப்பட்டால் தனக்கு தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைக் கேட்ட நீதிபதி அல்லி, “இவை குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும். தற்போது செப். 27 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு” என தனது உத்தரவில் தெரிவித்தார். 

 

இந்த நிலையில் அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக ஆர்.பி.வி.எஸ். மணியன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதனிடையே ஆர்.பி.வி.எஸ். மணியனனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தற்போது நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.