Skip to main content

நீரவ் மோடி கடன் பெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் நஷ்டம் எவ்வளவு தெரியுமா...?

Published on 03/11/2018 | Edited on 03/11/2018

தொழிலதிபர் நீரவ் மோடி ரூ. 13,000 கோடி கடன் பெற்று திருப்பி தராத பஞ்சாப் நேஷனல் வங்கியின் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 4,532 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. இந்த வங்கி சென்ற நிதியாண்டின் செப்டம்பர் மாத காலாண்ட்டில் ரூ. 560 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

pun

 


இந்த செப்டம்பர் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நஷ்டம் ரூ. 1,349 கோடியாக இருக்கலாம் என்று பல்வேறு ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் அவர்கள் கணித்ததைவிட மூன்று மடங்காக பஞ்சாப் நேஷனல் வங்கியின் நஷ்டம் அதிகரித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பி.என்.பி. விவகாரத்தில் அருண் ஜேட்லியின் மவுனத்திற்கு இதுதான் காரணம்!

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மெகா மோசடி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மவுனமாக இருப்பதற்கு அவரது மகள்தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பையில் உள்ள கிளையில் மாபெரும் பணமோசடி நடைபெற்றது. இந்தக் கிளையில் ரூ.12,600 கோடி மோசடி செய்த நீரவ் மோடி மற்றும் மேகுல் சோக்ஸி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். இந்த விவகாரத்தில் வங்கி ஆடிட்டர்களே காரணம் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்து வந்தார்.

 

 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ‘பஞ்சாப் நேஷனல் வங்கியின் பணமோசடி விவகாரத்தில் அருண் ஜேட்லி ஏன் இத்தனை நாள் மவுனமாக இருந்தார் என்பதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. இந்த மிகப்பெரிய பணமோசடி வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பு வழக்கறிஞரான அவரது மகள், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளின் மிகப்பெரிய ஒப்பந்ததாரர் என்பதுதான் அந்த காரணம். அது இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இந்த விவகாரத்தில் பல சட்ட நிறுவனங்களை ரெய்டு நடத்திய சி.பி.ஐ., ஏன் அவரது மகள் நிறுவனத்தில் சோதனை நடத்த தயங்குகிறது?’ என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அது தொடர்பாக தி வயர் இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையையும் அவர் இணைத்துள்ளார். 

 

அந்தக் கட்டுரையில் அருண் ஜேட்லியின் மகளுடைய ஜேட்லி-பக்‌ஷி சட்ட நிறுவனம் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துடன் ஒருமாத காலத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டதற்கான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.

Next Story

ஊழலோடு புற்றுநோயை ஒப்பிடுவதா? - மருத்துவர் சாந்தா வேதனை!

Published on 01/03/2018 | Edited on 01/03/2018

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் ரூ.12,600 கோடி மதிப்பிலான மெகா பணமோசடியில் ஈடுபட்டார் வைர வியாபாரி நீரவ் மோடி. இந்த பண மோசடி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் சுனில் மேத்தா, ‘நாங்கள் இனி இதுமாதிரியான தவறுகள் இனி நடக்க விடமாட்டோம்; அந்த புற்றுநோயை நீக்குவோம். 2011ஆம் ஆண்டில் இருந்து இந்த புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. நாங்கள் இதை அறுவைச் சிகிச்சை செய்து நீக்கி வருகிறோம்’ என பேசியிருந்தார்.

 

Santha

 

இந்நிலையில், பத்ம விபூஷன் விருது பெற்றவரும், புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவருமான சாந்தா, சுனில் மேத்தாவின் கருத்து குறித்து தனது கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘புற்றுநோய் என்ற வார்த்தையை கூச்சமான, நம்பிக்கையற்ற மற்றும் பயமூட்டும் ஒன்றாக காட்டிக்கொள்ளக் கூடாது. கேவலமான, மோசமான ஒன்றோடு புற்றுநோயை நிச்சயமாக ஒப்பிட வேண்டாம். அது புற்றுநோயால் பாதிக்க்கப்பட்டுள்ளவர்களை மேலும் அச்சமூட்டும். எனவே, புற்றுநோயை ஊழலோடு எப்போதும் இணைத்துப் பேசவேண்டாம்’ என ஆத்திரத்துடன் எழுதியிருந்தார். 

 

இதுகுறித்து ஆங்கில இதழ் ஒன்றிற்கு விளக்கமளித்துள்ள மருத்துவர் சாந்தா, ‘ஊழல் ஒரு கிரிமினல் குற்றம்; புற்றுநோய் அப்படி அல்ல. ஊழல் உள்நோக்கம் கொண்டிருப்பதைப் போல, புற்றுநோய் இருப்பதில்லை. எனவே, சுனில் மேத்தா தனது கூற்றைத் திரும்பப்பெறவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.