Skip to main content

மலேசியாவில் உடல்நலமின்றி சிகிச்சையிலிருக்கும் புதுச்சேரி இளைஞர்... ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

medical

 

மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் உடல்நலமின்றி சிகிச்சை பெற்றுவரும் புதுச்சேரி இளைஞர் இந்தியாவுக்குத் திரும்ப மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’  வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

 

"புதுச்சேரி பாகூர் கொம்யூன் அதிங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அகிலன்(22). இவர் மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 15.07.2020 அன்று அகிலன் உடல்நிலை சரியில்லாமல் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருடன் வேலை செய்யும் ஒருவர் அவரது பெற்றோருக்குத் தகவல் கூறியுள்ளார். மேற்கொண்டு இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படவில்லை. அதையடுத்து அகிலன் இந்தியாவுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது பெற்றோர் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர், முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

medical


இதுகுறித்து கடந்த 24.07.2020 அன்று முதல்வர் நாராயணசாமி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இதுவரையில் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அகிலனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அவரது பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே, புதுச்சேரி இளைஞர் அகிலன் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்குத் திரும்ப மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

இதுகுறித்து பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்".எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோல் அகிலனின் பெற்றோரும் அவரை ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.