Skip to main content

ஆக.12-ல் அம்ரித் மஹோத்சவ் விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

prime minister narendra modi speech at mannkibaat

ஒவ்வொரு மாதமும் இறுதி வார ஞாயிற்றுக்கிழமைகளில் 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 

 

அந்த வகையில் 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (25/07/2021) உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "ஆகஸ்ட் 12- ஆம் தேதி அன்று மகாத்மா காந்தி சபர்மதி ஆசிரமத்தில் அம்ரித் மஹோத்சவ் விழா தொடங்கும். இந்தியா சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் நிறைவுப் பெற்றதைக் குறிக்கும் வகையில் அம்ரித் மஹோத்சவ் விழா நடைபெறுகிறது. அம்ரித் மஹோத்சவ் விழாவில் அரசியல் இல்லை; கட்சிப் பேதமின்றி அனைவரும் கொண்டாடும் தேசிய விழா. 'வெள்ளையனே வெளியேறு' என போராட்டம் நடந்ததைபோல்  இந்தியாவை ஒருங்கிணைப்போம் என செயல்படுவோம். சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் 3டி முறையில் அச்சிட்டு வீடு ஒன்றை அமைத்ததைக் குறிப்பிட்டார். 

 

லைட் ஹவுஸ் என்னும் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் மிக விரைவாகக் கட்டடம் கட்டப்படுகிறது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கலாச்சாரங்களைப் புரிந்து நடப்பதில் மகத்துவம் அடங்கியுள்ளது. குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தியுள்ள ராதிகா என்பவரைக் குறிப்பிட்டார். குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையால் மலைப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு உதவி கிடைக்கிறது". இவ்வாறு பிரதமர் கூறினார். 


 

சார்ந்த செய்திகள்