Skip to main content

ராஜ் தாக்கரே பிறந்தநாள் சலுகை : பெட்ரோல் விலை ரூ.9 குறைப்பு!

Published on 14/06/2018 | Edited on 14/06/2018

ராஜ் தாக்கரேயின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் பெட்ரோல் விலை ரூ.9 வரை குறைவாக விற்கப்பட்டது. 
 

Raj

 

 

 

மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா என்ற கட்சியைச் சேர்ந்தவர் ராஜ் தாக்கரே. இக்கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே இன்று தனது 50ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடினார். தனது பிறந்த தினத்தை மற்றவர்களும் சிறப்பாக கொண்டாட, இன்று காலை சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தனது பிறந்த தினமான இன்று மக்களை மகிழ்விக்கும் வகையில் காலை முதல் மதியம் வரை பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் விலை ரூ.9 வரை குறைத்து விற்கப்படும் என அறிவித்தார்.
 

இந்த அறிவிப்பு வெகுவிரைவில் பரவ, மக்கள் பெட்ரோல் நிலையங்களை முற்றுகையிட்டனர். சில பெட்ரோல் நிலையங்களில் மட்டும் ரூ.4 முதல் ரூ.9 வரை பெட்ரோல் விலை குறைத்து விற்பனை செய்யப்பட, அதனால் பெட்ரோல் நிலையங்களுக்கு ஏற்படும் இழப்பை தாமே சரிசெய்து கொள்வதாகவும் ராஜ் தாக்கரே அறிவித்திருந்தார். 
 

இதனால், ரூ.84க்கு விற்கப்படும் பெட்ரோல் ரூ.75 வரை குறைத்து விற்கப்பட்டது. இதனைக் கண்காணிக்க ராஜ் தாக்கரேயின் ஆதரவாளர்களும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஐஸ்கிரீமுக்குள் மனித விரல்; பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Human finger in ice cream at maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் மலாட் பகுதியில் உள்ள பெண் ஒருவர், ஆன்லைனின் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன்படி, ஐஸ்கிரீம் அந்தப் பெண்ணின் கைக்கு வந்துள்ளது. ஐஸ்கிரீம் கவரை பிரித்த பார்த்த போது, அதில் மனித விரலின் துண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் மலாட் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். புகாரின் பேரில், ஐஸ்கிரீம் நிறுவனமான யும்மோ ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு எதிரான வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஐஸ்கிரீமுக்குள் கண்டெடுக்கப்பட்ட மனித உறுப்பை பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கூம்புக்குள் மனித விரலின் துண்டை கண்டெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

‘தேர்தல் பேச்சுகளிலிருந்து விடுபட வேண்டும்’ - பா.ஜ.க மீது ஆர்.எஸ்.எஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
RSS accuses BJP

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் முடிவு கடந்த 4 ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து மூன்றாவது ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். 

தேசிய அளவில் பா.ஜ.க பல இடங்களில் வெற்றி பெற்றியிருந்தாலும், சில மாநிலங்களில் தோல்வியை அடைந்துள்ளது. இதனால், பல முக்கிய பா.ஜ.க தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “மணிப்பூரின் நிலைமையை முன்னுரிமையுடன் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தேர்தல் பேச்சு வார்த்தைகளில் இருந்து விடுபட்டு தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

அதே போல், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் ரத்தன் ஷர்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘தேர்தலில் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்பதை விட ஆர்.எஸ்.எஸ்-ஐ அணுக வேண்டிய பொறுப்பு பா.ஜ.கவுக்கு உள்ளது. செல்ஃபி இயக்க ஆர்வலர்களால் அங்கீகாரத்திற்கான உந்துதல் இல்லாமல் உழைத்த வயதான அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. பா.ஜ.க தலைவர்கள் மட்டுமே உண்மையான அரசியலைப் புரிந்துகொள்கிறார்கள், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் முட்டாளாக இருந்தார்கள் என்ற தவறான அகங்காரம் சிரிப்பதற்குத் தகுதியானது. சிறப்பாகச் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட தியாகம் செய்து, பின்னர் வந்தவர்களைக் காயப்படுத்துவது போன்ற காரணத்தினால்தான் உள்ளூர் பாஜக தொண்டர்கள் ஆர்வமின்மையாக இருக்கின்றனர். 

இதற்கு மகாராஷ்டிரா ஒரு சிறந்த உதாரணம். ஏற்கனவே பா.ஜ.க மற்றும் பிளவுபட்ட சிவசேனா பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. ஆனால், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவு பா.ஜ.கவில் இணைந்தது. உறவினர்களுக்கு இடையேயான உட்கட்சி சண்டையால் இரண்டு மூன்று ஆண்டுகளில் சரத் பவார் மறைந்திருப்பார். தேசியவாத காங்கிரஸ் ஆற்றலை இழந்திருக்கும். ஏன் இந்த தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டது? காங்கிரஸ் சித்தாந்தத்திற்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடித் துன்புறுத்தப்பட்டதால் பா.ஜ.க ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே அடியில் பாஜக தனது பிராண்ட் மதிப்பைக் குறைத்து கொண்டது. மகாராஷ்டிராவில் பல வருட போராட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் எந்த வித்தியாசமும் இல்லாமல் மற்றொரு அரசியல் கட்சியாக மாறியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.