Published on 25/08/2018 | Edited on 25/08/2018

ஆந்திராவைச் சேர்ந்த பாஜக எம்பி நரசிம்ம ராவ், நேற்று குண்டூரிலிருந்து வியாஜயவாடாவுக்கு செல்வதற்காக தன்னுடைய காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கொலனுகொண்டா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது கார் விபத்துக்குள்ளாகி மோதியது. மோதியலில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் பலி, இன்னுமொரு பெண் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்றுவருகிறார். காரை ஓட்டிவந்த ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவந்துள்ளனர்.