Skip to main content

இப்போ விழுமோ எப்போ விழுமோ? - ஹெல்மெட்டுடன் பணியாற்றும் அரசு ஊழியர்கள்

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

 'Now or when will it fall?'-Government employees working with helmets

 

அரசு அலுவலகக் கட்டடம் பாழடைந்து கிடக்கும் நிலையில், அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அச்சத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றும் வினோத சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

 

தெலுங்கானாவில் ஜெகத்தியாலா மாவட்டம் பீர்பூர் நகரில் உள்ளது மண்டல பரிஷத் அலுவலகம். இந்த அலுவலகத்தின் கட்டடம் மிகவும் பாழடைந்துள்ளது. இதனால் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில், அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உள்ளனர். பலமுறை வேறு கட்டடத்திற்கு அலுவலகத்தை மாற்றும்படி ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கோரிக்கை வைத்த போதிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் அங்கே பணி செய்யத்தான் வேண்டும் என்ற கட்டாயத்திற்கும் உள்ளாகியுள்ளனர். எப்பொழுது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் இருக்கும் ஊழியர்கள், ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே இந்த அலுவலகத்தின் சில இடங்கள் இரண்டு முறை இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்; கோவை மாநகரக் காவல் அதிரடி

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

nn

 

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனக் கோவை மாநகரக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

கோவையில் நிகழும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவும் கோவை மாநகரக் காவல்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவதோடு பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் மோட்டார் வாகன விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு போக்குவரத்து பூங்காவில் தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு குறித்து பயிற்சி அளிக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

 

 

Next Story

விதிமுறைகளைப் பின்பற்றிய பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போலீசார்

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

police gave surprise to the women who followed the rules

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார்  தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும் பெண்கள் ஹெல்மெட் அணிவதை ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சை காவல்துறையினர் சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வழக்கம்போல் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நேற்று முன்தினம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பெண்களை போலீசார் நிறுத்தினர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்ததற்காக வெள்ளி நாணயத்தைப் பரிசாக அளித்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த செயலானது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.