மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருது 26 பேருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக இந்திய கிரிக்கெட் வீர முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த விருது பட்டியலில் அண்மையில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அர்ஜுனா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அர்ஜுனா விருதினை வழங்கினார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அர்ஜூனா விருதினை வழங்கினார். இதே போன்று மற்ற விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை வைஷாலி என்பதும், கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா அர்ஜுனா விருது பெற்ற நிலையில் இந்தாண்டு அவரது சகோதரி வைஷாலிக்கு அர்ஜுனா விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.