Skip to main content

 ராஜ் தாக்கரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

 

l t


மும்பை சென்ற லதா ரஜினிகாந்த், மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேவை  கிருஷ்ணா குஞ்சில் உள்ள  இல்லத்தில் சந்தித்து பேசினார்.  

 

இது குறித்து ராஜ் தாக்ரே, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  லதா ரஜினிகாந்த் உடனான சந்திப்பின் போது அரசியல், சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியதாக தெரிவித்துள்ளார்.

Today, Mrs. Lata Rajnikant, wife of the renowned actor Mr. Rajnikant, met up with Mrs.Sharmila and Mr. Raj Thackeray at their Krishna Kunj residence. 
A friendly meeting, wherein various topics from politics, to cinema and social issues were discussed. 

 

lr

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சுங்கச்சாவடிகளை தீ வைத்து எரிப்போம்” - ராஜ் தாக்கரே எச்சரிக்கை 

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

 Raj Thackeray says Let's set the toll booths on fire

 

மகாராஸ்டிர மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நவநிர்மாண் சேனா கட்சி, சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று (09-10-23) முல்லுண்டு, தானே ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கார், ஆட்டோ போன்ற சிறிய ரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நவநிர்மாண் சேனா போராட்டம் நடத்தினர். 

 

அப்போது, அவர்கள் அந்த சுங்கச்சாவடிகள் வழியாக வந்த சிறிய ரக வாகங்களை சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல வைத்தனர். இது தொடர்பாக நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “சாலைகளில் வாகனங்கள் செல்லக் கட்டணம் வசூலிப்பது என்பது மிகப்பெரிய ஊழல். ஒவ்வொரு ஆண்டும் சில நிறுவனங்கள் மட்டும் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தம் பெறுவது ஏன்?. ஏற்கனவே சாலை வரி கொடுத்துவிட்டோம். அப்படி இருக்கும் போது சாலைகளில் வாகனங்கள் செல்ல மீண்டும் ஏன் கட்டணம் கொடுக்க வேண்டும். அப்படி வசூலிக்கப்படும் பணம் அனைத்தும் எங்கு செல்கிறது?. 

 

கடந்த 30 ஆண்டுகளாக அரசுகள் சாலை நுழைவு கட்டணத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றன. ஆனால், இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகாராஸ்டிர மாநிலத்தில் பல கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிட்டன. ஆனாலும், யாரும் வாக்குறுதி அளித்தது போல் மகாராஸ்டிராவை சுங்கச்சாவடி இல்லாத மாநிலமாக மாற்றவில்லை. சுங்கசாவடிகள் மூலம் பல அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துகிறார்கள். 

 

சாலைகளில் வாகனங்கள் செல்ல கட்டணம் வசூலித்த போதிலும் சாலைகளில் எந்தவித வசதியும் இல்லாமல்  மோசமாக தான் இருக்கிறது. எனவே, இந்த பிரச்சனை குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசுவேன். அந்த சந்திப்பிற்கு பிறகு என்ன முடிவு கிடைக்கிறது என்று பார்க்கலாம்?. அதன் பிறகு, மாநிலம் முழுவதும் எங்களது கட்சித் தொண்டர்கள் சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளுக்கு செல்லும் சிறிய வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவார்கள். எங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்தால் சுங்கச்சாவடிகளை தீ வைத்து எரிப்போம்” என்று பேசினார். 

 

 

 

Next Story

அயோத்தி தீர்ப்பு குறித்து ராஜ் தாக்ரே கருத்து...

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.

 

raj thackeray about ayodhya verdict

 

 

இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா நவநிர்மாணசேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரே, "இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த போராட்டத்தில் கரசேவகர்கள் செய்த தியாகம் வீணாகவில்லை. விரைவாக ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். ராமர் கோயிலுடன், தேசத்திலும் ‘ராம ராஜ்யம்’ இருக்க வேண்டும், அதுவே எனது விருப்பம்" என தெரிவித்தார்.