Skip to main content

எம்.எல்.ஏ சீட் வேண்டாம்.... கவர்னர் பதவி தான் வேண்டும்... பாஜக மூத்த தலைவர்!

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்திருப்பது போல், கேரளாவிலும் 5 தொகுதியில் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் வட்டியூர்காவு, எா்ணாகுளம், கோணி, ஆலுவா 4 தொகுதிகளில், அந்த எம்எல்ஏக்கள் பாராளுமன்ற தோ்தலில் போட்டியிட்டு எம்பி ஆனதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனா். மஞ்சேஸ்சூரி தொகுதி எம்எல்ஏ மரணமடைந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.
 

இந்த நிலையில் வட்டியூர் காவு தொகுதியில் பாஜக சார்பில் மிசோரம் முன்னாள் கவா்னா் கும்மணம் ராஜசேகரன் பெயா் அறிவிக்கப்பட்டது. இது கும்மணம் ராஜசேகரணின் விருப்பம் இல்லாமல் தான் பாஜக மாநில தலைமை அறிவித்தது. உடனே கும்மணம் ராஜசேகரன் எம்எல்ஏ சீட் எனக்கு வேண்டவே வேண்டாம் அப்படியென்றால் கவா்னா் பதவிக்கு மோடியிடமும் அமித்ஷாயிடமும் என்னை பரிந்துரை செய்யுங்கள் பாஜக தலைவா் ஸ்ரீதரன் பிள்ளையிடம் கும்மணம் ராஜசேகரன் கறாராக சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. 

kerala bjp party senior leader kummanam rajashekaran not interest assembly by election


ஏற்கனவே கேரளா மாநில பாஜக தலைவராக இருந்த கும்மணம் ராஜசேகரை அந்த பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டு மிசோரம் கவர்னராக மத்திய அரசு  நியமித்து. பின்னர் கடந்த பாராளுமன்ற தோ்தலில் கவர்னர் பதவியை ராஜினாமா  செய்ய வைத்து திருவனந்தபுரம் தொகுதியில் கும்மணம் ராஜசேகரனை பாஜக சார்பில்  போட்டியிட்டு அதில் அவா் தோற்றார்.
 

இந்த நிலையில் தான் அவா் மீண்டும் கவர்னராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தார். இதற்கு மோடியும் அமித்ஷாவும் எந்த சிக்னலும் காட்டாமல் இருந்து வருகின்றனா். இந்த நிலையில் தான் வட்டியூர்காவு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தான் கும்மணம் ராஜசேகரன் ஆத்திரமடைந்தார். இதனையடு்த்து வட்டியூர்காவு தொகுதி்க்கு கும்மணம் ராஜசேகரனுக்கு பதில் திருவனந்தபுரம் மாவட்ட பாஜக தலைவர்  வழக்கறிஞா் சுரேஷ் அறிவித்தது பாஜக தலைமை. 


 

சார்ந்த செய்திகள்