Skip to main content

"சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு இல்லை"- மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்!

 

union education minister says lok sabha for the chennai iit

 

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (19/07/2021) தொடங்கியது. இதனையடுத்து இடைத்தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களைப் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் அறிமுகம் செய்து வைக்க முயன்றபோது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்களவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்பட்டது. பின்னர், தொடர் அமளிக் காரணமாக இரு அவைகளும் நாளை காலை 11.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

 

இதனிடையே, மக்களவையில் தி.மு.க.வின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "சென்னை ஐஐடியில் சாதி, மத ரீதியாக யாரையும் வேறுபடுத்தியதில்லை. மாணவர்களின் மனநலனை உறுதிச் செய்ய 24 மணி நேரமும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.  


 

இதை படிக்காம போயிடாதீங்க !