Skip to main content

குமாரசாமிக்கு சித்தராமையா கடிதம்! மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் விரிசல்?

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான சித்தராமையா தற்போதைய முதல்வர் குமாரசாமிக்கு பட்ஜெட் தாக்குதலில் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை திருப்பி எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் அதில் அண்ணபாக்யா என்ற இலவச அரிசி திட்டத்தில் மீண்டும் 7 கிலோ அரிசியே மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

 

அண்ணபாக்யா என்பது சாதாரண அரசு திட்டம் மட்டும்  இல்லை, அது பசிக்காக தினசரி அவஸ்தைப்படும் மக்களுக்கான திட்டம். அந்த மக்களின் பசியை உணர்ந்ததால் மட்டுமே, அந்த திட்டத்தை தொடங்கினேன். கடந்த காங்கிரஸ் ஆட்சி இந்த திட்டத்திற்காக ரூ. 11,564கோடி செலவிட்டது. மேற்பட்ட இதனால் மூன்று கோடிக்கும் மக்கள் பயனடைந்தனர். 7 கிலோ இலவச அரிசியை 5 கிலோவாக அறிவித்திருந்தார் முதலவர் குமாரசாமி. மீண்டும் அதை 7 கிலோவாகவே மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் சித்தராமையா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அதில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் மக்கள் அவதிப்படுவார்கள், அதையும் சரிபார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

உடனடியாக இந்த பரபரப்பான முரணில் கர்நாடக பாஜக மூக்கை நுழைத்து குமாரசாமிக்கு சித்தராமையா எழுதிய கடிதத்தை தங்களின் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், குமாரசாமியின் பட்ஜெட் கூட்டணியில் இருப்பவர்களுக்கே சிரிப்பாக இருந்தால் மக்களுக்கு எப்படி இருக்கும் என்று தீயை மூட்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைவரான எடியூரப்பவும் இதை ரீட்வீட் செய்து கூட்டணியையே பார்த்துக்கொள்ள முடியவில்லை மக்களை எப்படி பார்த்துக்கொள்ள போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.                

சார்ந்த செய்திகள்