Skip to main content

பொய்யான வாக்குறுதிகளை கேட்க விரும்பினால் மோடி பேசுவதை கேளுங்கள் - ராகுல் காந்தி!

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

rahul gandhi

 

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தி, இன்று பஞ்சாப் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

 

பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புராவில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பொய்யான வாக்குறுதிகளைக் கேட்க வேண்டுமென்றால், மோடி பேசுவதைக் கேளுங்கள் என விமர்சித்துள்ளார்.

 

பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: நான் பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன். பொய்யான வாக்குறுதிகளை நீங்கள் [பொதுமக்கள்] கேட்க விரும்பினால், மோடி, பாதல் மற்றும் கெஜ்ரிவால் பேசுவதைக் கேளுங்கள். உண்மையைப் பேச மட்டுமே எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

 

2014க்கு முன்புவரை, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவது குறித்து பிரதமர் பேசி வந்தார். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இப்போது, அவர் வேலையைப் பற்றியோ ஊழலைப் பற்றியோ பேசுவதில்லை. இப்போது பாஜக போதைப்பொருளைப் பற்றி மட்டுமே பேசுகிறது.

 

நான் 2013 இல் பஞ்சாப் வந்தபோது, பஞ்சாபின் இளைஞர்கள் போதைப்பொருளின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள் எனத் தெரிவித்தேன். ஆனால், பஞ்சாபில் போதைப்பொருள் பிரச்சனை இல்லை என்று பாஜகவும், அகாலிதளமும் என்னைக் கேலி செய்தனர்.  கரோனாவை பற்றி எச்சரித்து, கரோனா புயலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியபோது அவர்கள் என்னை கேலி செய்தார்கள். ஆனால் பிரதமர் பாத்திரங்களைத் தட்டி மொபைல் போன் டார்ச் லைட்டை ஏற்ற வலியுறுத்தினார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்