Skip to main content

குளிரில் நடுங்கும் வட மாநிலங்கள்... அச்சத்தில் பொதுமக்கள்!

Published on 13/01/2020 | Edited on 14/01/2020

நாடு முழுவதும் தற்போது கடுமையான குளிர் நிலவி வரும் சூழ்நிலையில், வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் குளிர் நிலவி வருகிறது. புதுதில்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.  இரவு நேரங்களில் சில மாநிலங்களில் குளிர் 10 டிகிரி வரை இருக்கின்றது.



குறிப்பாக புதுதில்லியில் முன் எப்போது இல்லாத அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. நேற்று உச்சகட்டமாக 2 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருந்துள்ளது. இதுவரை வட மாநிலங்களில் குளிரின் காரணமாக 60 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் வட மாநிலங்களை சேர்ந்த மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்