டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். ஈட்டி எறிதலில் அவர் வென்றுள்ள தங்கம்தான் சுதந்திரதிற்கு பிறகு தடகளத்தில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கமாகும்.
இதனையடுத்து நீரஜ் சோப்ராவிற்கு குடியரசு தலைவர், பிரதமர் என பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் இந்தியா முழுவதும் நீரஜ் சோப்ராவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ஹரியானவை சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதும், அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் உற்சாகத்தில் நடமாடினார்.
இந்தநிலையில் ஹரியானா முதல்வர், நீரஜ் சோப்ராவிற்கு ஆறு கோடி பரிசும், கிரேட் 1 வகை வேலையும் வழங்படும் என அறிவித்துள்ளார். மேலும் பஞ்ச்குலாவில் கட்டப்படவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கான மையத்தில், அவர் விரும்பினால் தலைமை பொறுப்பை ஏற்கலாம் எனவும் கூறியுள்ள ஹரியானா முதல்வர், 50 சதவீத சலுகையுடன் நீரஜ்சோப்ராவிற்கு நிலம் (பிளாட்) அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.