Threatening the young woman by telling her to love him

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சஞ்சய் குமார் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் இளம் பெண் ஒருவரும் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதால் இருவருக்குமிடையே அறிமுகம் ஏற்பட்டு நன்கு பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் சஞ்சய் குமாரின் செல்போன் பழுதாகிவிட்டதாகக் கூறி அந்த இளம்பெண்ணின் செல்போனை வாங்கி சில நாட்கள் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, இளம்பெண்ணிற்கு தெரியாமல் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து அதனை அவர் கண்டுபிடிக்க முடியாதபடி மறைத்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது செல்போன் பழுது சரிசெய்யப்பட்டதாகக் கூறி இளம்பெண்ணின் செல்போனை அவரிடமே திருப்பி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இளம்பெண்ணின் செல்போனில் மறைத்து வைத்த செயலியை தனது செல்போன் மூலம் ஆன் செய்த சஞ்சய் குமார், செல்போனின் முன், பின் கேமராவையும் இயக்கியுள்ளார். தொடர்ந்து இளம்பெண்ணிற்கு தெரியாமல் அவரை குளிக்கும் போது, மற்றும் ஆபாசமாக புகைப்படம் எடுத்து தனது செல்போனில் வைத்துள்ளார். பின்னர் அந்த புகைப்படங்களை எல்லாம் இளம்பெண்ணின் செல்போனுக்கு அனுப்பிய சஞ்சய் குமார் தன்னை காதலிக்கும் படி மிரட்டியுள்ளார். மேலும், பணம் கேட்டும் நெருக்கடி கொடுத்துள்ளார்.

Advertisment

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே தலைமறைவாக இருக்கும் சஞ்சய் குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.