உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவரும், அமைச்சருமான தேவ் சிங்கின் கை விரல் கார் கதவில் சிக்கி துண்டானது.

Advertisment

bjp minister accident

தேவ் சிங் நேற்று முஸாபர்நகரில் நடந்த விழா ஒன்றுக்கு தனது காரில் சென்றார். அப்போது அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் மாலையுடன் முண்டியடித்தனர். இதனையடுத்து தனது காரில் இருந்து இறங்கிய அவர், கதவை மூட முயற்சித்த போது, எதிர்பாராதவிதமாக கார் கதவில் அவரது வலது கை, சுண்டுவிரல் சிக்கிக்கொண்டது. பின்னர் அது துண்டாகி கீழே விழுந்தது.

Advertisment

வலியால் துடித்த அவர், அந்த வலியுடன் தனது துண்டான விரலைத் தேடினார். சிறிது நேரம் தேடலுக்கு பிறகு, அவரது தொண்டர் ஒருவர் அதை கண்டுபிடித்து எடுத்து கொடுத்தார். ஆனால், அதில் அவர் போட்டிருந்த மோதிரம் காணாமல் போயுள்ளது. பின்னர் விரலுடன் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தும் மருத்துவர்களால் அதனை ஒட்ட வைக்க முடியவில்லை.