Skip to main content

'பெண்களை தொட்டால் சுடும்' உ.பி இளைஞர் உருவாக்கி ஆண்டி ரேப் கன்..!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் ஷியாம் பிரசாத். இவர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்புணர்வுகளை தடுக்கும் நோக்கத்தில் புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். அதற்கு ஆண்டி ரேப் கன் என்று பெயரிட்டுள்ளார். இது பர்ஸ் பேன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் பட்டனை ஆபத்து காலத்தில் பெண்கள் அழுத்தினால், அதில் இருக்கும் சென்சார் மூலம் பெண்கள் இருக்கும் இடம் அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்றுவிடும்.

 

jk



உடனடியாக காவலர்களும் அந்த இடத்திற்கு வருவார்கள். இதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையும் என்று அந்த இயந்திரத்தை உருவாக்கியவர் கூறுகிறார். மேலும் அந்த பர்ஸ் வடிவ இயந்திரத்தில் இருக்கும் ட்ரிக்கர் போன்ற பட்டனை மேல் நோக்கி அழுத்தினால் துப்பாக்கி வெடித்ததை போன்று வெடி சத்தம் வரும்.  இதன் மூலம் அருகில் இருப்பவர்களின் கவனத்தை பெறலாம். இந்த இயந்தரம் பெண்களுக்கு பாதுகாப்பான ஒன்றாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
 

 

சார்ந்த செய்திகள்