Skip to main content

வாட்சப்பில் வதந்தி பரப்புபவர்கள் இனி அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுவர்

Published on 25/12/2018 | Edited on 25/12/2018

 

fsf

 

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் இனி வதந்திகள் பரப்புபவர்கள் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான சட்ட திருத்தம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்களில் போலியான செய்திகளும், வதந்திகளும் பரப்பப்படுவதால் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடப்பதால் அப்படிப்பட்ட செய்திகளை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் அடுத்த 24 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும், மேலும் அவற்றை அரசின் ஆதாரத்திற்காக 180 நாட்கள் அந்நிறுவனங்கள் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த சட்ட திருத்தம் குறித்து மக்கள் கருத்துக்களை அறிவதற்காக மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையதளத்தில் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது.  இது தொடர்பாக சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள், ட்விட்டர், யாகூ, போன்ற அமைப்புகளுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும், 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதிக்குள் இது தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்க சமூக ஊடகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.   

 

 

சார்ந்த செய்திகள்