Skip to main content

1947க்கு பிறகே நாட்டில் ஜனநாயகம் வந்தது என்பது தவறு - அமித் ஷா!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

amit shah

 

காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 51 வது நிறுவனத் தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் காவல்துறையின் பிம்பத்தைச் சீர்குலைக்க முயற்சிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

 

காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் நிறுவனத் தின நிகழ்வில் அமித் ஷா பேசியது பின்வருமாறு;

ஜனநாயகம் நமது நாட்டின் இயல்பு. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு பிறகே நாட்டில் ஜனநாயகம் வந்தது என்றோ அல்லது 1950-ம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகுதான் ஜனநாயகம் வந்தது என்றோ யாராவது கூறினால் அது தவறு. ஜனநாயகம் நமது நாட்டின் இயல்பு.

 

ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்பட்ட, அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட அமைப்புகள் முன்பே இருந்தன. துவாரகாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதவ குடியரசு இருந்தது. பீகாரிலும் குடியரசுகள் இருந்தன. எனவே ஜனநாயகம் நமது நாட்டின் இயல்பு.

 

ஏன் எனத் தெரியவில்லை. காவல்துறையின் பிம்பத்தைச் சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில விஷயங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. சில நல்ல விஷயங்கள் பேசப்படுவதில்லை. அரசு அமைப்பிலேயே கடினமான பணிகளைச் செய்பவர்கள் காவல்துறையினர் என நினைக்கிறேன்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்