Skip to main content

நாளை தூக்கு இல்லை! தண்டனை நிறுத்தி வைப்பு!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020
nn

 

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை (1.2.2020) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில், 4 பேரில் ஒருவரின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் மறு உத்தரவு வரும் வரைக்கும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில்,  குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல்செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

 

கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாளை (1.2.2020) டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், குற்றவாளி   பவன்குமார் குப்தா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவினால் நாளை தூக்கு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.  அம்மனுவில்,  கடந்த 2012ல் போலீசார் அவரை கைது செய்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அதனால் தனக்கு சிறார் சட்டப்பிரிவின் படி தண்டனை வழங்கப்பட வேண்டும்.  இந்த மனுவை தள்ளுபடி செய்த முடிவை மீண்டும் உச்சநீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

பவன்குமாரின் இந்த கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்கனவே நிராகரித்துள்ள நிலையில், மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று பவன்குமார் தாக்கல் செய்த மனுவை இன்று மாலையில் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

 

இந்நிலையில்,  4 பேரில் ஒருவரின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் மறு உத்தரவு வரும் வரைக்கும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்