Published on 19/03/2020 | Edited on 19/03/2020
காரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2,00,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ நெருங்கி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 168 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.