Published on 19/04/2023 | Edited on 19/04/2023

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள அந்தப் புகாரில், "கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் பணத்தை இழந்த அடையாளம் தெரியாத ஒருவர் என்னை தொடர்பு கொண்டு அணியின் உள் ரகசியங்களை சொன்னால் எனக்கு ஒரு பெரிய தொகை தருவதாகக் கூறினார்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முகமது சிராஜின் இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த நபரை அடையாளம் கண்டுபிடித்து நடத்திய விசாரணையில் முகமது சிராஜை தொடர்பு கொண்டவர் ஹைதராபாத்தை சேர்ந்த ஓட்டுநர் என தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.