Skip to main content

"அண்ணா ப்ளீஸ் ! என் தம்பிக்கும் சாப்பாடு கொடுங்க..." நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020


உலகின் பல நாடுகளுக்குக் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது.இதனைக் குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது.  மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 42,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது. 

 


இந்த 144 தடை உத்தரவு காரணமாக தில்லியில் வேலை செய்து வந்த அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், டெல்லியில் முடங்கினர். தங்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்பக் கோரி சில தினங்களுக்கு முன்பு பலர் சாலைகளில் குவிந்த நிலையில், சிலர் நடைப்பயணமாகவே தங்களின் சொந்த மாநிலத்திற்குச் சென்று வருகிறார்கள். அப்படிச் செல்லும் அவர்கள் உணவிற்கு கடுமையான கஷ்டப்படுகிறார்கள். தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவு பொட்டலத்தைப் பெற்றுக்கொண்ட சிறுமி ஒருத்தி, தன் தம்பியைக் காட்டி அவனுக்கும் ஒரு பாக்கெட் உணவு தருமாறு கேட்கிறாள். இந்தச் சம்பவம் பார்ப்பவர்களைப் பதறச்செய்யும் வகையில் அமைந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்