Skip to main content

இந்திய பொருளாதாரம் தடம் புரண்டுள்ளது-  ராகுல்காந்தி ட்வீட்!

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

இந்திய பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், "மிஸ்டர் பிரதமர் பொருளாதார ரயில் தடம் புரண்டுள்ளது. சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் எதுவும் இல்லை. வெளிச்சம் இருப்பதாக உங்கள் திறமையற்ற மத்திய நிதி அமைச்சர் சொன்னால், என்னை நம்புங்கள், இந்திய பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

congress former president rahul gandhi tweet based on india economic

 

 

இந்த டுவிட்டர் பதிவில் இந்திய பொருளாதாரம் தொடர்பான செய்தி ஒன்றினையும் இணைத்து பதிவிட்டுள்ளார். இந்தியாவில் கார் விற்பனை மந்தநிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கார் தயாரிக்கும் நிறுவனங்கள் குறைந்த அளவே கார்களை உற்பத்தி செய்து வருவதால், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிப்புரியும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

 

 

 

சார்ந்த செய்திகள்