பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் கடுமையான சிக்கலில் இருக்கிறார். ஒரு சிக்கலுக்கு மேல் ஒரு சிக்கலாக வெடித்து வருவதால் அவர் தமிழகம் வராமல் வெளி மாநிலங்களிலேயே இருக்கிறார். அவர் தமிழகம் வந்தால் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கக் காத்திருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

வேலூரை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திர நாயுடு பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை சொல்லியுள்ளார். பா.ஜ.க.வின் தேர்தல் நிதியை கையாண்ட கேசவவிநாயகம், அவரது பினாமி கோவர்த்தன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைவருக் கும் பணம் அனுப்பியதாக கணக்கு காண்பித்துள்ளார். அந்தப் பணம் தேர்தல் முடிந்ததும் கோவர்த் தனின் அக்கவுண்ட்டுக்கே திரும்ப வந்துவிட்டது. பணத்தைப் பெற்றவர்கள் வெறும் கமிஷனை மட் டும் பெற்றுக் கொண் டார்கள். அந்தப் பணம் கீழ்நிலையில் வேலை செய்யக்கூடிய கட்சிக் காரர்களுக்குப் போக வேண்டிய பணம். அவர் களுக்குப் போய்ச் சேர வில்லை. பணம் பெற்ற கட்சிப் பொறுப்பாளர்களும் அதை அனுபவிக்கவில்லை. எல்லாமே பல நூறு கோடிகளாக கேசவ விநாயகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த இவர் மீது வக்கிரமான செக்ஸ் புகார்கள், பணம் கையாடல் புகார்கள் எனத் தொடர்ந்து புகார் எழுந்து வந்தாலும் இவர் இன்றள விலும் மாற்றப்படவில்லை. இப்பொ ழுது மா.த.வுக்கும் இவருக்கும் மோதல் ஆரம்பித்திருக்கிறது. மா.த.வுக்குப் பதில் மாநில தலைவராக வர நினைக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் கேசவ விநா யகத்துடன் கூட்டணி போட்டுள்ளார். இந்தக் கூட்டணி பலமாக வேலை செய்து வருகிறது. இவர்கள் மா.த.வுக்கு எதிராகப் புகார் களைத் தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

bjp

Advertisment

தமிழிசை சௌந்தர்ராஜன் மாநிலத் தலைவ ராக இருந்தபொழுது தே.மு.தி.க.வுடன் சேர்ந்து ஒரு மெகா கூட்டணியை அமைத்தார். அந்தக் கூட்டணி இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் ஜெயித்தது. மேலும், பா.ஜ.க.வுக்கு என பதினெட்டு சதவீத வாக்குகளைப் பெற்றது. தமிழிசையின் இந்த சாதனையால் அவர் அகில இந்திய அளவில் புகழ் பெற்றார். அவருக்கு கவர்னர் பதவி அளிக்கப் பட்டது. அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு இம்முறை தென்சென்னை பாராளுமன்றத் தொகுதியில் களம் கண்டார். அவரை டெல்லி பா.ஜ.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் முதல் வேட்பாளராக அறிவித்தது.

இதனால் அந்தத் தொகுதியைக் குறிவைத்து காய் நகர்த்திவந்த மாநிலத் தலைவரின் ஆதரவாளர்களான எஸ்.ஜி.சூர்யா, கரு.நாகராஜன், ஹெச்.ராஜா போன்றோர் கலக்கம் அடைந்தார்கள். தென் சென்னையில் தமிழிசை வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழிசைக்கு ஆதரவாக பிரதமரின் ரோட் ஷோ ஒன்றும் தென்சென்னை யில் நடத்தப்பட்டது. ஆனால், “அந்த ரோட் ஷோ வெற்றி பெறவில்லை. தமிழிசை மூன்றாவது இடத்தைப் பெறுவார், இந்தத் தேர்தலில் அவர் டெபாசிட்கூட பெற முடியாது”என்று அவரது எதிரிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். இதனால் டென்ஷனான தமிழிசை, "கரு.நாகராஜன் தேர்தல் பொறுப்பாளராக இருந்து என் தொகுதிக்கு தலைமை கொடுத்த பணத்தை செலவு செய்யவில்லை' என பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த கரு.நாக ராஜன், "நான் அவர்கள் கொடுத்த பணத்தை முழுவதுமாக செலவு செய்தேன்' என கணக்கு ஒன்றைக் காட்டினார். இந்நிலையில், எல்.முருகனுக் கும் மா.த.வுக்கும் 200 கோடி ரூபாய் கொடுத்தேன் என மணல் மாபியா தலைவர்களான கரிகாலனும், ரத்தினமும் தமிழ் நாடு முழுக்க தம்பட்டமடித்து விட்டார்கள்.

Advertisment

nn

“மணல் மாபியாவுக்கு எதிராக பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அவர்களிடம் எப்படி மா.த. பணம் வாங்கலாம்?’என கேசவ விநாயகம் தரப்பு, அகில இந்திய தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பி யுள்ளது. பா.ஜ.க. மா.த. ஊழல்வாதிகளைத் தட்டிக் கேட்பார், ஊழலை எதிர்ப்பார் என அவருக்கு உருவாகியிருந்த இமேஜ், ‘அவர் அமலாக்கத்துறையைக் காட்டி கொள்ளை யடிப்பவர்களிடம் கட்டிங் வாங்குபவர்’ என சுருங்கிப் போனது. இதைத் தெரிந்துகொண்ட பா.ஜ.க. டெல்லி மேலிடம், மா.த.வை உடனடியாக நிர்வாகிகள் கூட்டம் கூட்டி நிலைமையை சீர் செய்யுமாறு உத்தரவிட்டது.

மாநில நிர்வாகிகள் கூட்டத்தை மா.த.வால் கூட்ட முடியவில்லை. மாநிலம் முழுக்க பா.ஜ.க. தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே பண விவகாரத்தில் அடிதடி சண்டை நடந்து, அது வெட்டுக்குத்தாகப் பரிணமித்து காவல் நிலையப் புகாராக மாறியுள்ளது. சமீபத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக வேலூரைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியும், ஊடகப் பொறுப்பாளரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக தொடர்ச்சியாக பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

“இதைக் கேள்வி கேட்பதற்கு பா.ஜ.க.வின் தமிழகத் தலைமையில் ஆள் இல்லை. "தேர்தலில் வந்த பணத்தை பங்கு போட்டுக் கொள்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், கட்சி விவகாரங் களை கவனிக்க ஆள் இல்லை என்கிற நிலைமை ஏன் ஏற்பட்டது?''’என அமித்ஷா மா.த.வை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மா.த. அளித்த பதிலில் திருப்தியடையாத அமித்ஷா தேர்தல் முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என சில கட்டளைகளைப் பிறப்பித்துள்ளதாக டெல்லி பா.ஜ.க.வினர் தெரிவிக்கிறார்கள். இதைத் தெரிவிக்கும் பா.ஜ.க.வினர், தேர்தல் முடிந்ததும் மாநிலத் தலைமையில் மாற்றம் நடைபெறும் என அவரவரது ல தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.