Skip to main content

கேரள உள்ளாட்சித் தோ்தலில் கம்யூனிஸ்ட் அமோக வெற்றி!

Published on 16/12/2020 | Edited on 17/12/2020

 

Communist victory in Kerala local election

 

கேரளாவில் உள்ளாட்சித் தோ்தல் கடந்த 8, 10, 14 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடந்தது. தோ்தலில் பதிவான வாக்குகள் 244 மையங்களில் இன்று (16-ஆம் தேதி) எண்ணப்பட்டது. போட்டியிட்ட மூன்று பிரதான கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ.கவின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் வாக்கு எண்ணும் மையங்களின் வெளியே கொடிகளுடன் குவிந்துநின்றனர்.

 

வழக்கம் போல் தலைநகரமான திருவனந்தபுரமும் முதல்வர் பிணராய் விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூாிலும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. வாக்கு எண்ணப்பட்ட ஒரு சில மணி நேரத்திலே முடிவுகள் வெளிவரத் தொடங்கின. பஞ்சாயத்து வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை சட்டமன்றத் தோ்தலில் வெற்றி பெற்ற ரேஞ்சுக்கு அந்தந்த கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். வெற்றிபெற்ற பெண் வேட்பாளர்களைக் கூட தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.

 

இதில் நடந்து முடிந்த மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், கிராமப் பஞ்சாயத்துகளின் மொத்த முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 6 மாநகராட்சியில் கம்யூனிஸ்ட் 4-ம் காங்கிரஸ் 2-ம் பிடித்தது. அதில் முக்கியமாக எதிர்பார்க்கபட்ட திருவனந்தபுரம் மாநகராட்சியைத் தொடர்ந்து மீண்டும் கம்யூனிஸ்ட் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 52 வார்டுகளைக் கைப்பற்றி தக்க வைத்துள்ளது. மேலும் பா.ஜ.க கடந்த முறை போல் 35 வார்டுகளைக் கைப்பற்றி 2-ஆம் இடத்திலும் காங்கிரஸ் 10 வார்டுகளைப் பிடித்து மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் மேயர் வேட்பாளராக குன்னுகுழி வார்டில் போட்டியிட்ட ஒலினா தோல்வியடைந்தது கம்யூனிஸ்ட்டுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அந்த வார்டில் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது.

 

Communist victory in Kerala local election

 

இதேபோல் மொத்தமுள்ள 86 நகராட்சியில் காங்கிரஸ் 45-ம் கம்யூனிஸ்ட் 35-ம் பாஜக 2-ம் மற்றவர்கள் 4-ம் பிடித்துள்ளனர். மாவட்டப் பஞ்சாயத்தைப் பொறுத்த வரை மொத்தமுள்ள 14-ல் கம்யூனிஸ்ட் 10-ம் காங்கிரஸ் 4-ம் பிடித்தன. 152 ஊராட்சி ஒன்றியங்களில் 108 கம்யூனிஸ்ட்டும், 44 காங்கிரசும் கைப்பற்றியுள்ளது. 941 கிராமப் பஞ்சாயத்துகளில் கம்யூனிஸ்ட் 515-ம் காங்கிரஸ் 376-ம் பாஜக 22-ம் மற்றவர்கள் 28-ம் பிடித்துள்ளனர்.

 

ஆளும் கட்சி கம்யூனிஸ்டாக இருந்தாலும் உள்ளாட்சித் தோ்தலில் பா.ஜ.க திருவனந்தபுரம் மாநகராட்சி உட்பட கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாதிாியான முடிவை பா.ஜ.கவினர் கொஞ்சமும் எதிா்பாா்த்து இருக்க மாட்டார்கள். ஆனால், கிராமப் பஞ்சாயத்து வார்டுகளில் அதிக இடங்களைக் கைப்பற்றி முன்னேற்றம் அடைந்துள்ளது. இதேபோல் காங்கிரஸ் கம்யூனிஸ்டை 2-ம் இடத்துக்குத் தள்ளும் என்றும் தொலைக்காட்சியில் விவாதங்களில் ஈடுபட்டவர்கள் கூறிய நிலையில் எல்லாம் மாறி விட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.