Skip to main content

சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளால் கடைகளில் குவிந்த மக்கள்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

chips pocket money in karnataka people and children are  happy 

 

சிப்ஸ் போன்ற தின்பண்டங்களை எப்போதும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால், கர்நாடகாவில் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சிப்ஸ் பாக்கெட்டுகளை கூட்டம் கூட்டமாக வாங்கிச் செல்கின்றனர்.

 

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள உண்ணூர் கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக அங்குள்ள கடைகளில் விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் உள்ளதாகப் பரவிய தகவலால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை போட்டிப் போட்டு சிப்ஸ் பாக்கெட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், கடைகளில் உள்ள சிப்ஸ் பாக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து உள்ளன. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பெயரில் விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம்  அக்கிராமத்தில் உள்ளவர்கள் இதுவரைக்கும் தங்களுக்கு சுமார் முப்பதாயிரம் ரூபாய் வரை கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

 

மீண்டும் அதே நிறுவனங்கள் பெயரில் கடைகளில் விற்பனைக்கு வந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் பணம் ஏதும் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இச்செயலானது,  சிப்ஸ் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பிரபலமாக்குவதற்கு இதுபோன்று செய்துள்ளதாகவும், சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்த ரூபாய் நோட்டுகள் உண்மையான நோட்டுகள்தானா என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

கார் ஓட்டுநரை தாக்கிய லாரி ஓட்டுநர்; கதறி அழுத மனைவி

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Lorry driver hits car driver; A crying wife

 

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ரேடியல் சாலையில் கார் ஒன்றின் மீது லாரி மோதிய சம்பவத்தில் கார் ஓட்டுநருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், லாரி ஓட்டுநர் கார் ஓட்டுநரை அவருடைய மனைவி முன்பே தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ரேடியல் சாலையில் லாரி மோதியதில் கார் சேதமடைந்தது. இதனால் கார் ஓட்டுநர் லாரி ஓட்டுநரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது லாரி ஓட்டுநர் அலட்சியமாக பதில் சொன்னதாலும், ஆபாசமாக பேசியதாலும் லாரியின் சாவியை கார் ஓட்டுநர் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த நபரின் மனைவி முன்பே லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்த நபரின் மனைவி கதறி அழுது கூச்சலிட்ட நிலையிலும் அவர் மீது தாக்குதல் தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.