Skip to main content

ஜேம்ஸ்பாண்ட் படங்களை ஓவர்டேக் செய்த ஆட்டோ ஓட்டுநர்... காரணம் இதுதான்!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019


சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் ஆட்டோ டிரைவரின் செயல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சாலையில் ஆட்டோ ஒன்றை ஓட்டிச்செல்லும் டிரைவர் ஆட்டோ ஓடிக்கொண்டு இருக்கும்போதே,டயரை மாற்றுவதற்காக ஆட்டோவை ஒருபக்கமாக தூக்குகிறார். அப்பொழுது ஆட்டோ 2 டயரில் சென்று கொண்டிருக்கிறது. உடனே ஆட்டோவில் பின்னால் இருந்தவர் ஆட்டோ டயரை கழட்டுகிறார்.வேறு ஒரு ஆட்டோவில் வந்த ஒருவர் மாற்று டயரை வழங்க அந்த டயரை மாட்டுகிறார்.

 


இவ்வளவும் ஆட்டோ ரன்னிங்கில் இருக்கும்போதே நடக்கிறது. இந்த வீடியோவை ஹர்ஷ் கோங்கா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,    "நான் நிறைய டயர் மாற்றி பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோல ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலை பார்த்ததில்லை" என தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டாயம்; புதுவை அரசு அதிரடி

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Meters mandatory for autos; puduchery govt

 

புதுச்சேரியில் ஆட்டோவிற்கு மீட்டர் பொருத்துவது கட்டாயம் என  அம்மாநில போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீட்டர் பொருத்தாத, வரையறுத்த கட்டணத்தை வசூலிக்காத ஆட்டோ உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்கள் 1.8 கிலோமீட்டருக்கு 35 ரூபாயும் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கு 18 ரூபாயும் வசூலிக்க வேண்டும். மீறினால், அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்களுக்கு மீட்டர் பொறுத்தப்படுவதும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

திருடு போன 12 ஆட்டோக்கள் பறிமுதல்; அதிரடி காட்டிய போலீஸ் 

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Police seized 12 stolen autos

 

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அடிக்கடி பயணிகள் ஆட்டோ திருடு போவதாக மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், இன்று சத்துவாச்சாரி காவல் நிலைய போலீஸார், பிள்ளையார் குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி விசாரணை செய்தபோது, ஆட்டோவை ஓட்டி வந்த மாதனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(38) என்பவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்த நிலையில் ஆட்டோவை திருடி வந்ததாக ஒப்புக்கொண்டார்.

 

இந்த நிலையில் ஆட்டோவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கோவிந்தராஜை சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்து டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் தொடர் விசாரணை மேற்கொண்டதில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 12-ஆட்டோக்களைத் திருடியதாகவும், அந்த ஆட்டோக்களை கருகம்பத்தூர் பகுதியில் பதுக்கி வைத்து, ஆட்டோவின் நம்பர் பிளேட்டை மாற்றியும், புதுப்பித்தும் வேறு மாவட்டங்களில் விற்பனை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

 

இதனை அடுத்து பதுக்கி வைத்திருந்த ஆட்டோக்கள் விற்பனை செய்யப்பட்ட ஆட்டோகள் என 12 ஆட்டோக்களை பறிமுதல் செய்த வேலூர் சத்துவாச்சாரி காவல்துறையினர் ஆட்டோ திருடிய கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.