Skip to main content

ஏடிஎம்ல் பணமெடுக்கும் கணவன்மார்களே உஷார்...!!

Published on 08/06/2018 | Edited on 08/06/2018
atm

 

 

 

கணவராக இருந்தாலும் மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்த கூடாது என்று நுகர்வோர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

 

பெங்களூரைச் சேர்ந்த வந்தனா என்பவர் தனது ஏடிஎம் கார்டை கணவரிடம் கொடுத்து 25000 பணத்தை எடுத்துவர சொல்லியிருக்கிறார். கணவர் ஏடிஎம் மெஷினில் கார்டை போட்டும் அவருக்கு பணம் வரவில்லை. ஆனால் வந்தனாவுக்கு பணம் கழிந்துவிட்டது என்று மெசேஜ் சென்றுள்ளது. 

 

இதனால் குழம்பிபோனவர்கள், வங்கியை நாடியுள்ளார்கள். அவர்களிடம் இதைப்பற்றி கூறியதை கண்டுகொள்ளாமல் அவர்கள் கணவரிடம் எதற்கு உங்களின் பின் நம்பரை பகிர்ந்து கொண்டீர்கள் என்று கேட்டுள்ளனர். இது விதி மீறல் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

அதன்பின் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியதால், சிசிடிவி காட்சிகளை பார்த்திருக்கின்றனர். அப்போது ராஜேஷுக்கு சாதகமாக காட்சிகள் இருந்துள்ளது. இருந்தாலும் நீதிமன்றம் நீங்கள் செய்தது விதிமீறல் என்று சொல்லி நீதிமன்றம் இந்த தகவலை தள்ளுபடி செய்துள்ளது.

 

எனவே இனி உங்கள் ஏடிஎம் கார்டை கணவராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் அவர்களிடம் பின் நம்பரை பகிர்வது விதிமீறல் ஆகையினால் இதுபோன்று ஏதேனும் பிரச்சனை நேர்ந்தால் உங்கள் பணம் கிடைக்காது. 

சார்ந்த செய்திகள்