Skip to main content

ஒலிம்பிக் போட்டியை காண ஒத்திவைக்கப்பட இருக்கும் சட்டப்பேரவை!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

lovlina borgohain

 

டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பி.வி. சிந்து வெண்கலம் வென்றுள்ளார்.

 

மேலும், பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியா சார்பாக பங்கேற்ற அசாமின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். தற்போது நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக்சில் அசாம் மாநிலத்தின் சார்பாக பங்கேற்றுள்ள ஒரே வீரர் லோவ்லினா போர்கோஹெய்ன்தான். அசாமிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட முதல் பெண் குத்துச்சண்டை வீரரும் இவர்தான்.

 

இந்தநிலையில், லோவ்லினா போர்கோஹெய்ன் பங்கேற்கும் குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டி, இன்று (04.08.2021) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையடுத்து லோவ்லினா போர்கோஹெய்ன் விளையாடுவதைக் காணும் வகையில் அசாம் சட்டமன்றத்தை 11 மணியிலிருந்து 11.30 வரை ஒத்திவைக்கக் கோரி அம்மாநில சட்டமன்ற சபாநாயகருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், சபாநாயகர் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து 30 நிமிடங்கள் அசாம் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட இருக்கிறது. அசாமில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்