Skip to main content

அமிர்தசரஸ் ரயில் விபத்து; நடந்தது எப்படி காரணம் என்ன?

Published on 20/10/2018 | Edited on 20/10/2018

அமிர்தசரஸில் ஏற்பட்ட கோர ரயில் விபத்துக்கான காரணம் மற்றும் எப்படி இந்த விபத்து நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

TRAIN

 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த விழாவானது ரயில் பாதை உள்ள இடத்தில் அதுவும் ஆளில்லா ரயில்வே பாதையின் அருகே கொண்டாடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புக்கு ஒரு ரயில்வே போலீசார் கூட இல்லை. அதேபோல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் எந்த முன்னேற்பாடும் விழாக்குழுவினரால் செய்யப்படவில்லை. மேலும் அந்த ரயில்வே கிராஸிங்கில் வேலிகள்கூட இல்லாத நிலையில் நிறைய பக்தர்கள் ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு மொபைலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். 

 

 

விழாவில் ராவண வதத்தின் போது,  ராவண உருவபொம்மையில் இருந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ,  மக்கள் அலறியடித்து  ரயில்வே கேட் நோக்கி ஓடினர்.  கூட்டம் அதிகமாக இருந்ததால் தண்டவாளத்தின் அருகே ஏராளமானோர் நின்றிருந்தனர்.  சிலர் தண்டவாளத்தை கடந்து அந்த பக்கம் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பாராத விதமாக  27வது ரயில்வே கேட் வழியாக மின்னல் வேகத்தில் புறநகர் ரயில் எண் 74943 சென்றது.  பட்டாசு சத்தத்தினால் ரயில் வந்த சத்தம் மக்களுக்கு கேட்கவில்லை.  இதனால், ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற இந்த ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் நின்றிருந்த மக்கள் மீது மோதியது.  இந்த கோர விபத்தில் 50 பேர் பலியானதாக முதல்கட்ட செய்திகள் வர தற்போது பலி எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் ரயில் ஒலியெழுப்பவில்லை பட்டாசு சத்தத்தில் ரயில் சைலன் ஓசைக்கூட கேட்கவில்லை என காயமடைந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு மொபைலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். மக்களின் இந்த அஜாக்கிரதையாக போக்குதான் இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

 

TRAIN

 

இந்த கோரவிபத்திற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி உயிரிழந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை அறிவித்துள்ளார். மேலும் பஞ்சாப் அரசின் சார்பாக உயிரிழந்தவர்களுக்கு ஐந்துலட்சம் நிவாரண தொகையும் காயமடைந்தோர் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிக்சை எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாப்பில் இன்று துக்கநாளாக கொண்டு அரசு அலுவலங்கள், பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்