Skip to main content

செப்டம்பர் 5ம் தேதிக்குள் ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி - மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

fd


இந்தியாவில் கரோனா 2ம் அலையின் தீவிரம் காரணமாகப் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. மூன்றாம் அலை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று பல்வேறு நிபுணர்களும் கூறி வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. தினமும் 70 முதல் 80 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துள்ளது.

 

தற்போது இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில், வரும் 5ம் தேதிக்குள் இந்தியா முழுவதும் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்