Skip to main content

"ஆட்சி அமைப்பதை உறுதி செய்யுங்கள்..மின்சார கட்டண சீட்டை கிழித்து எறியுங்கள்" - ஆம் ஆத்மியின் அசரவைக்கும் தேர்தல் வாக்குறுதி!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

MANISH SISODIYA

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள அம்மாநிலத்தின் முக்கிய கட்சிகள் தயாராகி வருகின்றன. மேலும் மஹாராஷ்ட்ராஆளுங்கட்சி சிவசேனா, பீகார் ஆளுங்கட்சி ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் உத்தரப்பிரதேச தேர்தலில் களமிறங்கவுள்ளன.

 

அதேபோல் டெல்லியின் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தின் 403 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த அந்த கட்சி, தற்போது வேட்பாளர்களைக் கவரும் விதத்தில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரத்தை இலவசமாகத் தருவோம் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ள ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, நிலுவையில் உள்ள 38 லட்சம் மக்களின் மின்கட்டணமும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது; உத்தரப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அதிகப்படியான மின்கட்டணங்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 38 லட்சம் குடும்பங்களுக்கு அதிகப்படியான மின்கட்டணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் அரசாங்கம் அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதுகிறது. நீங்கள் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்க வேண்டும். சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு எங்கள் கட்சி ஆட்சி அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் இந்த மக்களுக்குக் கூற விரும்புகிறேன். எங்கள் அரசு அமைந்தவுடன் மின்சார கட்டணச் சீட்டை கிழித்து எறியுங்கள். நிலுவையிலுள்ள அனைத்து மின் கட்டணங்களும் ரத்து செய்யப்படும். இது அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவாதம்.


இவ்வாறு மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்