தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சில இடங்களில் கனமழையும் பதிவாகி வருகிறது. கரூர், சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, செங்கல்பட்டு, வேலூர், கரூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ள 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.