Skip to main content

1.59 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு... மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்! 

Published on 09/01/2022 | Edited on 09/01/2022

 

 1.59 lakh people affected by corona ... Federal Ministry of Health information!

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு, மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 632 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில்  1 லட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கு  கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 327 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது வரை கரோனாவால் இந்தியாவில் 4,83,790 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிப்பிலிருந்து 40,863 பேர் மீண்டுள்ளனர். தற்பொழுது வரை 5,90,611 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேபோல் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளது.

 

இந்த 3,623 பேரில் 1,409 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டு 2,214 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்