Skip to main content

நான் தான் எடியூரப்பா பேசுறேன்... - காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவியிடம் பேரம்!

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மனைவியிடம் பேரம் பேசியதாக காங்கிரஸார் குற்றம்சாட்டுகின்றனர்.

 

yeddy

 

கர்நாடக சட்டசபையில் இன்று காலை எம்.எல்.ஏ.க்களுக்கான பதவிப்பிரமாணம் தொடங்கியது. எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.

 

இந்த வாக்கெடுப்பில் தனக்கு சாதகமாக வாக்களிக்கச் சொல்லுமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவியிடம் எடியூரப்பா பேரம் பேசியதற்கான ஆடியோ ஆதார, இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.எஸ்.உக்ரப்பா, ‘எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரது மனைவிக்கு செல்போன் மூலம் அழைத்திருக்கிறார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் தனக்கு சாதகமாக வாக்களிக்க, உங்கள் கணவரிடம் கூறுங்கள் எனக்கூறிய அவர், அதற்கு ஆதாயமாக அமைச்சர் பதவியும், ரூ.15 கோடி பணமும் தருவதாக பேரம் பேசியிருக்கிறார்’ என குற்றம்சாட்டியுள்ளார்.

 

இதற்கு முன்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடாவுக்கு, பா.ஜ.க. ஆதரவாளரான ஜனார்த்தன ரெட்டி செல்போன் மூலம் தொடர்புகொண்டு ரூ.150 கோடிக்கு மேல் பேரம் பேசியதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்கள் மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை அணிய தடை - கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி

Published on 10/02/2022 | Edited on 10/02/2022

 

hjk

 

மாணவர்கள் மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிக்கு அணிந்து வர கர்நாடக உயர்நீதமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி தூண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன்காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. சில இடங்களில் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். காவல்துறையினர் சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். 

 

அதன்தொடர்ச்சியாக ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை சூழ்ந்து காவி துண்டு அணிந்தவர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட, பதிலுக்கு அந்த மாணவி அல்லாஹு அக்பர் என கோஷமிட்டது என கர்நாடக மாநிலம் கடந்த சில நாட்களாக பதட்டமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் மத அடையாளங்களை பயன்படுத்துவது தொடர்பாக கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் மாணவர்கள் மத அடையாளத்தை அடையாளப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேல் விசாரணை முடியும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 


 

Next Story

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு...கர்நாடக சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்தார். ஏற்கனவே 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு. முதல்வர் எடியூரப்பா நாளை காலை 10.00 மணியளவில் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க உள்ள நிலையில், சபாநாயகர் அதிரடி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

KARNATAKA MLAS DISQUALIFIED STRENGTH INCREASE ASSEMBLY SPEAKER RAMESH KUMAR ANNOUNCED

 

 

 

கர்நாடக சட்டப்பேரவை மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்டது. அதில் பாஜகவிற்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா எளிதில் வெற்றி பெறுவார். தமிழகத்தை பின்பற்றி இது போன்ற நடவடிக்கையை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் எடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.