Skip to main content

தைப்பூச மண்டப பூட்டு உடைக்கும் போராட்டம் - நெல்லையில் பரபரப்பு

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
neethi

 

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் வரும் அக்டோபர் 11 முதல் 22ம் தேதி வரை மகா புஸ்கர விழா நடைபெறவிருக்கிறது.  இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாமிரபரணி ஆற்றில் நடந்து வருகிறது.  உத்தரபிரதேசத்தில் அலகாபாத் நகரில் காசியில் உள்ள கங்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புஸ்கரத்தின் போது புனித நீராடுவார்கள்.  அதைப்போன்றே தாமிரபரணியிலும் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 

இந்த புஸ்கர விழா தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை முருகன் ஆலயத்தின் அருகே உள்ள தைப்பூச மண்டப   கரையோரம் நடக்கும்.  அதன் தொடர்ச்சியாக ஆற்றோரம் உள்ள பகுதிகளிலும் புனித நீராடுவார்கள்.    இதற்காக ஆன்மீக அமைப்புகள் தைப்பூச மண்டபத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.    பக்தர்கள் அதிக அளவில் திரளுவதால் தைப்பூச மண்டப பகுதி பாதுகாப்பற்றது. மேலும்,  அந்தக்கரையோரம் ஆற்று நீர் சுழற்சி இருப்பதால் பக்தர்கள் நீராடும்போது அசம்பாவீதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.  எனவே,   பாதுகாப்பு உள்ள வேறோரு பகுதியில் விழாவை வைத்துக்கொள்ள இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி உத்தரவிட்டதோடு,  அந்த பகுதிக்கு தடையும் விதித்துவிட்டார்.   இதனால் ஆன்மீக அமைப்புகள் கொந்தளித்தன.

 

nellai

 

 இந்நிலையில் இன்று இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலும் , பொறுப்பாளர் குற்றாலம் நாதன் தலைமையிலும் ஆன்மிக அமைப்புகள் திரண்டன.  தைப்பூச மண்டபத்தில்தான் விழா நடத்தப்பட வேண்டும் .  எனவே, அந்த மண்டபத்தின் பூட்டை உடைக்கும் போராடத்திற்காக அணி வகுத்தார்கள்.    அவர்களை வழிமறித்த நெல்லை தாசில்தார் ஆவுடையநாயகம் ,  பாலம் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் ஆது தடை செய்யப்பட்ட பகுதி்.  சட்டவிரோதமாக தைப்பூச மண்டபத்திற்கு செல்லக்கூடாது என்றதுடன் அவர்களூடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.   இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அறிவித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.  வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

 

சார்ந்த செய்திகள்