ராஜஸ்தான் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 55வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சுவையூட்டப்பட்ட பாப்கார்ன், பழைய கார் விற்பனை வரி உயர்வு உள்ளிட்ட பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில், உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கூடிய பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் கேரமல் பாப்கார்னுக்கு 18% வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50%க்கும் அதிகமான சாம்பலைக் கொண்ட ஆட்டோகிளேவ்டு ஏரேட்டட் கான்க்ரீட் (ஏசிசி) பிளாக்குகள், 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய மற்றும் பயன்படுத்திய கார்களின் விற்பனை மீதான ஜிஎஸ்டியை 12% இல் இருந்து 18% ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியின் வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.