Skip to main content

மூன்று தொகுதிகளில் தனி கவனம் செலுத்தும் சசிகலா! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

ddd

 

தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இதையடுத்து, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாவட்டந்தோறும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவருகின்றனர்.

 

இந்தநிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளத்தில் ஞாயிற்றுகிழமை (27.06.2021) நடைபெற்றது. கூட்டத்தில், அஇஅதிமுகவுக்குப் பொதுச் செயலராக சசிகலா தொடர வேண்டும். சசிகலாவுக்கு எதிராக சில மாவட்டங்களில் கட்சி தொண்டர்கள், கிளை, நகர, ஒன்றியக் கழக நிர்வாகிகள் ஒப்புதல் பெறாமல் அவர்களது விருப்பத்திற்கு மாறாக சிலபேரை மட்டும் கூட்டி நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

 

அதிமுக ஒற்றுமையுடனும் வலிமையுடன் செயல்படும் நோக்கத்தோடு தொலைபேசி வாயிலாக சசிகலாவுடன் உரையாடிவரும் அதிமுக உறுப்பினர்களை சர்வாதிகாரத் தன்மையோடு  நீக்கி வருவதைக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சசிகலா அவர்கள், மாவட்டந்தோறும் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தி, தொண்டர்களைச் சந்தித்து, தொண்டர்களின் கட்சிதான் அதிமுக என்பதை வலுப்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்துகிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

இது சசிகலாவுக்கு உற்சாகத்தை அளித்ததாக கூறப்படுகிறது. தொண்டர்களிடம் இருந்துவரும் கடிதங்களைப் படிக்கவும், அவர்களுடன் செல்ஃபோனில் பேசுவதற்காகவும் ஒரு அறையை ஒதுக்கியுள்ளார். காலைமுதல் இரவுவரை இந்த அலுவலகம் இயங்குகிறது. காலை உணவு அருந்திய பின்னர் சசிகலா இந்த அறைக்கு வந்து கடிதங்களைப் படிப்பது, தொண்டர்களிடம் பேசுவது என சுறுசுறுப்பாக இயங்குகிறார். 

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் வெற்றிபெற்ற தேனி மற்றும் போடி தொகுதிகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் அதிகம் பேசுகிறாராம். இதேபோல் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிகம் பேசுகிறாராம். இந்தத் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்துகிறாராம் சசிகலா. 

 

 

சார்ந்த செய்திகள்