Skip to main content

நிவாரண பொருட்கள் கொடுத்தனுப்பிய மாணவர்கள்... பதிலுக்கு இளநீர் கொடுத்தனுப்பிய டெல்டா விவசாயிகள்

Published on 19/11/2018 | Edited on 19/11/2018

emotional incident gaja

 

 

கஜா புயலால் எண்ணெற்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வேதாரண்யத்தில் மட்டும் 2.50 இலட்சம் மரங்கள் சாய்ந்துள்ளதாக தகவல்களும் வெளியாகின. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன. பொதுமக்களும் அவர்களுக்கு உதவிசெய்து வருகின்றனர். ஏராளமான மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.

 

அப்படிதான் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களால் இயன்ற உதவிகளை பொருட்களாக ஒரு டெம்போவில் அனுப்பி வைத்தனர். இந்த டெம்போ டெல்டா விவசாயிகளிடம் சேர்ந்து பொருட்களை இறக்கிவிட்டு கிளம்பியது. அப்போது அந்த டெம்போ காலியாக இருப்பதைப் பார்த்த விவசாயிகள். அந்த டெம்போ முழுக்க இளநீர்களை அனுப்பி வைத்தனர். கைமாறு கருதாமல் மாணவர்கள் செய்த உதவிக்கு, நன்றி மறவாத விவசாயிகள் செய்த பதில் உதவி செய்தி அறிந்த அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்