Published on 05/03/2020 | Edited on 05/03/2020
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
கட்சி தொடங்குவது தொடர்பாகவும், பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை விரைவுப்படுத்துவது குறித்தும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 50,000 க்கும் மேற்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்திற்கு பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.