Skip to main content

அனைத்து மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரை!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
dgp


திமுக தலைவர் கலைஞர் திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரை வழங்கியுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27ம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சரியாக 6.30 அளவில் காவேரி மருத்துவமைனயின் அறிக்கை வெளியானது. அதில், கலைஞரின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளைப் பராமரிப்பது ஒரு சவாலாக இருக்கிறது. இதற்கு அவரது வயது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில், கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைப்பதன் அடிப்படையிலேயே அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என கூறப்பட்டிருந்தது.

இதனால், தொண்டர்கள் மத்தியிலும் பிற கட்சி தலைவர்கள் மத்தியிலும் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் ஒரு பதற்றம் பற்றியது. இதையடுத்த காவேரி மருத்துவமனை இருக்கும் ராயப்பேட்டை பகுதிக்கு வரும் திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருகிறது. அத்துடன் இரவு பகலாக திமுக தொண்டர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது நேற்று மதியம் முதல் இன்று மதியம் வரை கலைஞருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், அவற்றினை அவரது உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்ளும் தன்மை ஆகியவற்றை பொறுத்துதான் மருத்துவமனை தரப்பில் அடுத்த அறிக்கை வெளியாகும் என தெரிகிறது. இன்று மாலை 6 மணியளவில் புதிய அறிக்கை வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநகர காவல்துறை ஆணையர்களுக்கு டிஜிபி அறிவுரை வழங்கியுள்ளார்.

சார்ந்த செய்திகள்