கடந்த ஏப்ரல் மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இராணுவ கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பிரதமர் மோடிக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை அடுத்து அவரது கருப்புக் கொடி காட்டி கண்டனத்தை தெரிவித்தனர். இதிலிருந்து தப்பிப்பதற்காக மோடியின் பயணத்திட்டம் சென்னைக்குள்ளேயே தரைவழியில் அல்லாமல் வான் மார்க்கமாக அமைக்கப்பட்டது. அப்படியும் விடாமல் பிரம்மாண்ட கருப்பு பலூனை மேலே அனுப்பியது திமுக. அன்று ட்விட்டரில் #gobackmodi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக இருந்தது. அது கடைசியில் உலகலெவலில் பேமஸானது. இது பலதரப்பில் விவாதத்தை ஏற்படுத்தவும் செய்தது.
தற்போது பாஜகவின் தேசிய தலைவரான அமித் ஷா, தமிழக பாஜகவின் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வுக்காக சென்னைக்கு வந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகைக்கு ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்தது போல, தற்போது அமித் ஷாவின் வருகைக்கும் இந்திய அளவில் #gobackamitsha என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
பாஜக தலைவர் அமித் ஷாவின் தோற்றத்தின் அடிப்படையில் 'அம்மன்' திரைப்படத்தில் நடித்த நடிகர் நாகிரெட்டியுடனும் 'குணா', 'மகாநதி' ஆகிய படங்களை இயக்கிய நடிகர் சந்தான பாரதியுடனும் ஒப்பிட்டு மீம்ஸ்களை பரப்பினர். ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருக்கும் அமித் ஷாவை தமிழக மீம் கிரியேட்டர்கள் வளைத்து வளைத்து மீம்ஸ் போட்டு நகைக்கின்றனர்.
தமிழ் படம் 2.0 வில் சிவாவின் நண்பர்களாக வரும் இளைஞர் பட்டாளத்தில் ஒருவராக நடித்திருக்கிறார் சந்தான பாரதி. வழக்கமான தோற்றத்திலிருந்து மாற்றமாக நிறைய முடியுடன் மாடர்ன் உடையுடன் சந்தான பாரதியின் தோற்றம் பார்க்கவே செம கலாயாக இருக்கிறது. முகம் எல்லாம் தாடி, தலையில் நீண்ட முடி என்று டீக்கடையில் சிவாவுக்கு அட்வைஸ் செய்வார். இந்த ஒரு டெம்பிளேட்டையும் இந்த #gobackamitshaவில் இணைத்து விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றனர். சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகியிருக்கும் சில மீம்ஸ்கள் இங்கே...