Skip to main content

ஷாந்தனு படத்தில் இணைந்த யூ-ட்யூப் பிரபலம்! 

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

certified rascals

 

 

நடிகர் சாந்தனு பாக்யராஜ், விஜயுடன் இணைந்து 'மாஸ்டர்' மற்றும் நாயகனாக 'ராவணக் கோட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் 'மாஸ்டர்' படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராக இருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'ராவணக் கோட்டம்' படம் கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்ததும் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. 

 

இதனிடையே தயாரிப்பாளார் ரவீந்தர் சந்திரசேகரின் படத்தில் நடிக்க சாந்தனு ஒப்பந்தமானார். அந்தப் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். மேலும் பாக்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இப்படத்தை இயக்குகிறார்.

 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு 'முருங்கைகாய் சிப்ஸ்' பலரையும் கவர்ந்தது. புதுமணத் தம்பதியரின் முதல் இரவில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகளை நகைச்சுவையாக விரசமில்லாமல் திரைக்கதையாக அமைத்துள்ளார் ஸ்ரீஜர். ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளனர்.

 

ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி, எடிட்டராக ஜோமின் மேத்யூ, கலை இயக்குநராக நர்மதா வேணி, இசையமைப்பாளராக தரண் ஆகியோர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய பாடல் வெளியிடப்பட்டு வைரலானது. 

 

இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தில் ‘செர்டிஃபைடு ராஸ்கல்ஸ்’ என்ற சேனலின் மூலம் பிரபலமான ஸ்ரீராம் க்ரிஷ் இணைகிறார் என்பதை அறிவிப்பதில் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் மகிழ்கிறது’ என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்