உலகின் மிகவும் பிரபலமான தரவுத்தளமான ஐ.எம்.டி.பி (IMDB), ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இணைத் தொடர்கள் உள்ளிட்ட பட்டியலை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான (ஜூலை 5 வரை) மிகவும் பிரபலமடைந்த இந்தியப் படங்களின் தரவரிசை பட்டியலை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் கமலின் 'விக்ரம்' (தமிழ், 8.8) படம் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 'கே.ஜி.எஃப் 2' (கன்னடம், 8.5), 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் (இந்தி, 8.3), ஹிருதயம் (மலையாளம், 8.1), ஆர்.ஆர்.ஆர் (தெலுங்கு, 8.0), ஏ தேர்சடே (இந்தி, 7.8), ஜுண்ட் (இந்தி, 8.4), சாம்ராட் பிருத்விராஜ் (இந்தி, 7.2), ரன்வே 34 (இந்தி, 7.2), கங்குபாய் கதியவாடி (இந்தி, 7.0) ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழ் படம் என்ற சாதனையை விக்ரம் படம் படைத்துள்ளதால் கமல் மற்றும் தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.