Skip to main content

'தளபதி 67'... மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி?

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

vijay and lokesh kanagaraj joining thalapathy67 movie

 

சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். 

 

இந்நிலையில் 'தளபதி 67' படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'தளபதி 67' படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்  இந்த கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணையவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல் நடிக்கும் 'விக்ரம்' படமும், விஜய்யின் தளபதி 66 படமும் முடிந்த பிறகு இருவரும் 'தளபதி 67' படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ரசிகர்கள் ட்விட்டரில் #Thalapathy67 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்