நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது அரசியல் வருககைக்கு பிறகு இரண்டு படங்கள் நடிப்பதாக தெரிவித்திருந்தார். இதில் ஒரு படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விஜய்யின் 68வது படமாக வெளியாகியிருந்த இப்படம் முதல் நாளில் ரூ.126 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம் தற்போது ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையில் விஜய்யின் கடைசி படமான அவரது 69வது படத்தை அ. வினோத் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு த்ரிஷா, சமந்தா, மிருணாள் தாக்கூர், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘பிரேமலு’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மமிதா பைஜுவும் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். தயாரிப்பு நிறுவனம், விஜய்யின் பழைய படங்களிலுள்ள அவரது அறிமுக சீன்களை எடிட் செய்து தங்களின் முதல் தமிழ் பட அறிவிப்பு குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அந்நிறுவனத்தின் எக்ஸ் தளப் பதிவில், “எங்களின் முதல் தமிழ் திரைப்படம்... 5 மணிக்கு சந்திப்போம் நண்பா, நம்பி...” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படம் விஜய்யின் 69வது படம் பற்றிய அறிவிப்பாக இருக்குமென சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது.
5 mani-ku sandhippom nanba nanbi 🤝🏻
We are happy to announce that our first Tamil film is …………#KVN5update Today at 5 PM 🔥 pic.twitter.com/XU3UIO9TId— KVN Productions (@KvnProductions) September 13, 2024