வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து இயக்கியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் நாளை (05.09.2024) வெளியாகவுள்ளது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் டி.ஏஜிங் தோற்றத்திலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த்தையும் நடிக்க வைத்துள்ளனர். மேலும் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலுக்கு பயன்படுத்தி பாடவைத்துள்ளனர்.
இப்படத்தின் முன்பதிவு டிக்கெட் ஆரம்பித்து அனைத்து காட்சிகளும் நிரம்பி வருகிறது. மேலும் சிறப்பு காட்சி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த சூழலில் படத்தை வரவேற்க ரசிஅக்ர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் வெங்கட் பிரபு, முதல்வர் ஸ்டாலினை கோட் என அழைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் இருவரும் ஏஐ மூலம் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “ஏஐ மூலம் செய்யப்பட்ட இந்த புகைப்படம் உண்மையாக மாற எனது விருப்பம். அப்படி டெஸ்லா தமிழ்நாட்டிற்கு வந்தால் முதல்வர் ஸ்டாலினின் சிறந்த முன்னெடுப்பாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் ஆப்பிள், கூகுள், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறார்.
ஒரு துறையில் எப்போதும் சிறந்து விளங்கும் நபரை கோட் (GOAT) என அழைக்கும் சொல்லாடல் இருந்து வருகிறது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
I wish this AI generated image becomes true 💥
If #Tesla comes to Tamil Nadu, it will be a #Goat move by our Cm @mkstalin#CMStalinInUSA @Udhaystalin na @TRBRajaa saar 🔥🙏🏽🤞🏼👌🏽 pic.twitter.com/0OavlU8PsR— venkat prabhu (@vp_offl) September 4, 2024